கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்
1.
திரு அருள் நடுமெய்ஞ்ஞான திரித்து,
வரில்நரனாகிய மா துவின் வித்து! – கிரு
2.
பண்ணின பாவமெலாம் அகல்வித்து,
நிண்ணயமாய் மிகவுந் தயை வைத்து – கிரு
3.
தந்திரவான்கடியின் சிறைமட்டு,
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – கிரு
4.
தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி – கிரு
5.
தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய் திராணி அளித்து – கிரு
6.
அம்பரமதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த, – கிரு
kirubai burinththenai aal – nee parane!
kirubai purinththenai aal – nidham
1.
thiru arul nadumeynjnjana thiriththu,
varil neeranakiya ma thuvin viththu! – kiru
2.
pannina pavamelam akalviththu,
ninnayamay mikavunth dhayai vaiththu – kiru
3.
dhanththiravankadiyin siraimaddu,
enththai, makizhnththunran anbubaraddu – kiru
4.
dhamai urum pala aasaiyai neekkis
sami! ennai umakkalayam aakki – kiru
5.
tholvinaiyal varum sapam ozhiththu
nalvinaiye sey thirani aliththu – kiru
6.
amparamathurai vanavar potrra
kempeeramay visuvasikal eethdha, – kiru